விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்! கடுப்பாகி சனம் ஷெட்டி விடுத்த எச்சரிக்கை! வைரலாகும் வீடியோ!sanam-shetty-warning-meera-mithun-for-talking-badly-abo

பிக்பாஸ்  மீரா மிதுன் சமூகவலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு அவர் சமீபத்தில் தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், விஜய், சூர்யா போன்றோர் தங்களது அப்பாவின் மூலமாகவே நடிகர்கள் ஆனார்கள் எனவும் மோசமாக பேசி தொடர்ந்து வீடியோ வெளியிட்டுகொண்டுள்ளார்.

இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி மீரா மிதுனை மோசமாக வறுத்தெடுத்தனர். இந்த நிலையில் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை தரக்குறைவாக பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொந்தளித்து போனர். 

இந்நிலையில் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், விஜய்சாருக்கு  அவரது அப்பா மூலமாக சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் முதல் வெற்றியை பெற 5 வருடங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது. மேலும் முதல் படத்திலேயே இவர் எல்லாம் ஒரு நடிகரா?  என நெகட்டிவாக பலரும் பேசினார்கள். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல், தனது திறமை மற்றும் கடின உழைப்பால் அவர் தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். 

இதை பணத்தால் வாங்க முடியாது. 
மேலும் நீங்கள் இப்படி பேசுவதால், விஜய் உங்களிடம் ஆன்லைன் காலில் வந்து பேசினார் என  சொல்கிறீர்கள். எதாவது நம்பும்படி பேசுங்கள். நீங்கள் பேசுவதை அவர் கண்டுக்கவே மாட்டார்.  உங்களுக்கு பதில் சொல்ல  நானே போதும். Cyber Bullying, Harassment நீங்கள்தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.  இதனால் ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்து  
நீங்கள் எதிர்பார்த்தது போல பிரபலமாகலாம். இதோட நிப்பாட்டிகொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.