சினிமா

குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்துகொள்ள ரெடியாக இருக்கும் பிக்பாஸ் இளம் பிரபலம்! ப்பா.. இவருக்கு பெரிய ஆர்மியே இருக்கே!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ப

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. நேர்மையாக எதையும் வெளிப்படையாக பேசக் கூடிய இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம்  பெரும் ஆர்மியே உருவானது.

சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அவருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரின் மனதையும் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சனம் ஷெட்டி சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என கேட்டுள்ளார். அதற்கு சனம் உடனே "ஒய் நாட்" என பதிலளித்துள்ளார். இதன் மூலம் அவர் நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமாக உள்ளார் என கூறி வருகின்றனர். ஆனால் குக் வித் கோமாளி சீசன் 3 குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.


Advertisement