ப்பா.. அழகு சிலைடா.! கோட், சூட்டில் சும்மா நச்சுனு இருக்கும் சனம் ஷெட்டி!! வைரலாகும் ஸ்டைலிஷ் கிளிக்!!sanam-shetty-latest-clicks-viral

விஜய் தொலைக்காட்சியில்  பிக்பாஸ் சீசன் 4 ல்  கலந்துகொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாக, தைரியமாக பேசினார். அதனால் அவர் சில எதிர்ப்பை சந்தித்தாலும் , பல சமயங்களில் பாராட்டையும் பெற்றார். இவருக்கென ரசிகர்கள் ஆர்மியும் உருவானது.

சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெருமளவில் பிரபலமாகி, தற்போது நடிகராக வலம்வரும் தர்ஷனின் முன்னாள் காதலி. இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்ற நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக சனம் போலீசில் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சனம் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது கோட்,சூட் போட்டு செம சிக்கென ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.