தர்ஷன் செய்த மோசமான காரியத்தால், நொந்து போய் அவரது காதலி எடுத்த அதிரடி முடிவு.! வீடியோ உள்ளே!!sanam-shetty-interview-about-dharshan-sherin-love

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர்.மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல்,  யார் வம்புக்கும் செல்லாமல் நேர்மையாக இருப்பவர்.

sanam shetty

இந்நிலையில் தர்சனும் பிரபல நடிகை சனம்  ஷெட்டியும் காதலித்துவருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாங்கள் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும்  சனம் ஷெட்டி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றொரு போட்டியாளரான நடிகை செரீனுடன் நெருங்கி பழகி வருகிறார்.

sanam shetty

இந்நிலையில் சனம் ஷெட்டி பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது தர்ஷன் மற்றும் செரீனுக்கு  இடையே உள்ள உறவு குறித்து கேட்டபோது, பிக்பாஸ் கிராமத்து டாஸ்க் கொடுத்தபோது, ஷெரின் தர்சனின் மடியில் அமர்ந்தது, தர்ஷன் அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எல்லாம் நான் தர்ஷன்கிட்ட எனக்கு செய்ய எதிர்பார்த்தவை. அதனை பார்த்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

 யாருக்கு எப்பொழுது யார் மீது காதல் வரும் என சொல்ல இயலாது. ஒருவேளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபிறகும் தர்சனுக்கு ஷெரீனை  பிடித்து இருந்தால், இருவரும் காதலித்தால் கண்டிப்பாக நான் விட்டுக் கொடுத்துவிடுவேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.