தப்பு பண்ணலன்னா ஏன் இதை செய்யணும்?? ஐஷூ வெளியிட்ட கடிதம்.! பிக்பாஸ் பிரபலம் நறுக் பதிலடி!!

தப்பு பண்ணலன்னா ஏன் இதை செய்யணும்?? ஐஷூ வெளியிட்ட கடிதம்.! பிக்பாஸ் பிரபலம் நறுக் பதிலடி!!


sanam-shetty-answer-about-aishu-abology-letter

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில போட்டியாளர்கள் முறையிட்ட நிலையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவர் அப்படி என்ன செய்தார்? அவரை வெளியேற்றியது நியாயம் இல்லை என ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் கொந்தளித்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்டான ஐஷூ மன்னிப்பு கேட்டு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் பிக்பாஸ் வீட்டில் எப்படி இருந்துள்ளேன் என்பதை பார்க்கும்போது எனக்கே என் மீது வெறுப்பு ஏற்படுகிறது. எனக்கு கிடைத்த பெரிய வாய்பை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குடும்பத்தினருக்கும் சக பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டேன்.

இந்த நிகழ்ச்சியால் நான் உயிரை விடும் நிலைக்கும் தள்ளப்பட்டேன். ஆனால் எனது பெற்றோர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையால் அவ்வாறு செய்யவில்லை. பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.பிக்பாஸ் வீட்டில் மோசமாக விளையாடியதற்காகவும் கெட்ட வார்த்தை பேசிப்பதற்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகையும்,  பிக் பாஸ் பிரபலமுமான  சனம் ஷெட்டி, தற்போது ஏன் ஐஷூ பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டியதை நம்பவில்லை என்றால் ஏன் இவ்வளவு பிரச்சினையை சந்திக்க வேண்டும். அநீதிக்கு இதுவே ஆதாரம். உண்மையில் யாருமே பாதுகாப்பாற்றதாக உணராத போது ஏன் இன்னும் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முத்திரை குத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 மேலும் பிரதீப் ஐஷூவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வாரா? பிரதீப் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை  அவர் நம்புகிறார். எனவே சேனலுக்கு ஒரு கடிதம் எழுதி பிரதீப் மீது இருக்கும் தவறான குற்றச்சாட்டை நீக்குவதை உறுதி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அது உண்மையான மன்னிப்பாக  இருக்கும். இல்லையெனில்  மக்களிடமிருந்து தப்பிப்பதற்கான மன்னிப்பாகவே இது இருக்கும் என பதிவிட்டுள்ளார்.