சினிமா

செம தில்தான்!! 300கிமீ அதுவும் பைக்கில்.. கோமாளி பட நடிகையின் துணிச்சலை கண்டு வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!

Summary:

Samyuktha hegde travel 300km at bike in lockdown

தமிழ் சினிமாவில் வாட்ச்மேன் திரைப்படத்தில் ஜி. வி பிரகாஷ் உடன் இணைந்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.  அதனைத் தொடர்ந்து அவர் ஜெயம்ரவியுடன் கோமாளி, வருண் மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பப்பி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் கன்னடத்தில் க்ரிக் பார்ட்டி,  காலேஜ்  குமார் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்புகள் தடைசெய்யப்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் வித்தியாசமான போட்டோஷூட் மற்றும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு 300 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே பயணம் செய்துள்ளார். 

இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், தங்கமும் வைரமும்தான் பெண்களின் சிறந்த நண்பர்கள் என யார் சொன்னது? எனது பைக்தான் எனக்கு சிறந்த நண்பன்.  பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு பைக்கில் 300 கி.மீ வரை சென்றேன். எனது பயணத்தின் சிறுபகுதிதான் இது என்று கூறியுள்ளார். இந்நிலையில் சம்யுக்தாவின் துணிச்சலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement