சினிமா

ஆபாச உடையில் உடற்பயிற்சி!! பார்க்கில் கோமாளி படநடிகை மீது தாக்குதல்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

Summary:

Samyuktha hedge attacked by people in park

தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிக் கால காதலியாக  நடித்திருந்தவர்  நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதனை தொடர்ந்து அவர் வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னட மொழியிலும் ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா  சமீபத்தில் பெங்களூரில் பூங்கா ஒன்றில் தனது தோழிகளுடன் சென்று உடற்பயிற்சி செய்துள்ளார். அப்பொழுது அவர் அரைகுறையாக ஆபாசமாக உடையணிந்திருப்பதாகவும்,  இதுதான் நமது பண்பாடா?  நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டாமா என கூறி அங்கிருந்த பெண் மற்றும் சில நபர்கள் அவரிடம் தகராறு செய்து மோசமாகத் திட்டியுள்ளனர். மேலும் நடிகை சம்யுக்தாவின் தோழியையும் தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நடிகை சம்யுக்தா இதுகுறித்து போலீசார்கள் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Advertisement