அடேங்கப்பா! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தாவிற்கு அடித்த பேரதிர்ஷ்டம்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

அடேங்கப்பா! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தாவிற்கு அடித்த பேரதிர்ஷ்டம்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!


samyuktha-got-movie-chance

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து சம்யுக்தா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது  விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் சம்யுக்தா நடிப்பதாகவும். அவரது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

bigboss

விஜய் சேதுபதி மற்றும் ராஷி கன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் துக்ளக் தர்பார். மேலும் இத்திரைப்படத்தில் பார்த்திபன், கருணாகரன், ராஜ், பக்ஸ் பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.