தமிழகம் சினிமா

'வெறுங்கோப கைப்பிடியில்லா கூர்மையான கத்தி' வெளியானது சமுத்திரகனியின் 'பற' ட்ரைலர்.!

Summary:

samuththirakkani - new tamil movie - para trailer release

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றி படம் தான் என்று கூற வேண்டும். இவர் 1997 -ம் ஆண்டு திரையுலகில் உதவி இயக்குனராக கே.விஜயன் என்பவரிடம் பணிபுரிந்தார்.

மேலும் அதன் பிறகு சுப்ரமணிய புரம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து நாடோடிகள் படத்தின் மூலம் தனது இயக்குனர் பணியையும் தொடர்ந்து வருகிறார். இதுவரை பல படங்களை இயக்கியுள்ள இவர் பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும்  நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆவண கொலைகளை மையமாகக் கொண்டு இயக்குனர் கீரா இயக்கும் 'பற' என்ற படத்தில் சமுத்திரகனி நடித்து வருகிறார். மேலும் இவருடன் சாந்தினி தமிழரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சினேகன் பாடல் எழுதி உள்ளார். எம்.எஸ் ஸ்ரீகாந்த் இசை அமைத்துள்ளார். 

தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


Advertisement