முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் சமுத்திரக்கனி! ஒர்க் அவுட் வீடியோவால் வாயை பிளந்த ரசிகர்கள்!

முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் சமுத்திரக்கனி! ஒர்க் அவுட் வீடியோவால் வாயை பிளந்த ரசிகர்கள்!


samuthirakani-workout-video-viral

தமிழ்சினிமாவில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சமுத்திரக்கனி. அதற்கு முன் அவர் உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு மற்றும் நாலு என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கியுள்ளார் . ஆனால் அவருக்கு நாடோடிகள் திரைப்படம்தான் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி போராளி, நிமிர்ந்து நில், தொண்டன், அப்பா சமீபத்தில் வெளிவந்த நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.மேலும் சமுத்திரகனி இயக்குனராக மட்டுமின்றி துணை நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார். 

Samuthirakani

மேலும் இவர் நடித்த சாட்டை, அப்பா போன்ற மாணவர்களுக்கு கருத்துமிக்க திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களால் பெரும் ஹீரோவாக பார்க்கப்பட்டார். மேலும் இவர் மிகவும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.

அண்மையில் ஹலிதா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் விமர்சன ரீதியாக பெருமளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் சமுத்திரகனி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


View this post on Instagram

Samuthirakani newlook🔥

A post shared by Filmipedia (@filmipedia_) on