சினிமா

ஒரு மாஸ் ஹீரோ இதுமாதிரியான படத்தில் நடித்தது சரியா? அதிரடியாக பிரபல நடிகர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா?

Summary:

samuthirakani talk about nerkonda parvai movie

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்த்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும்இந்தியாவின் பல பகுதிகளிலும் வசூல் சாதனையும் குவிகிறது.

samuthirakani க்கான பட முடிவு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களிடம், நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் மாஸ் ஹீரோ அஜித் நடித்தது சரியா என கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு சமுத்திரக்கனி அஜித் அவர்கள் இப்படத்தில் நடிப்பதற்கு ராயல் சல்யூ. ட் இப்போதைய காலகட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோ தனது கடை இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறி வரும்நிலையில், சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படிப்பட்ட கதைகளில் அஜித் நடித்தது அருமை.

என்னை போன்ற நடிகர்கள் வருடம் முழுவதும் சொல்வதை அஜித் ஒரே காட்சியிலேயே கூறிவிட்டார.  மேலும் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறும் போதுதான் அது பெரியளவில் ரசிகர்களை போய் சேரும் என உற்சாகத்துடன் கூறியுள்ளார்.


 


Advertisement