ராஜமௌலி படத்தில் இணையும் பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?

ராஜமௌலி படத்தில் இணையும் பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?


Samuthirakani acting in rrr movie with rajamouli direction

உலக அளவில் இந்திய சினிமாவை தலைநிமிர வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் வெளியான அநேக படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மாவீரன், நான் ஈ போன்ற படங்களை தொடர்ந்து பாகுபலி என்ற பிரமாண்ட படைப்பை இந்திய சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் ராஜமவுலி.

Rajamouli

பாகுபலி இரண்டு பாகங்களை அடுத்து நடிகர்கள் ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் இருவரையும் வைத்து RRR என்ற அடுத்த பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார் ராஜமவுலி. படத்தின் நாயகி யார் என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Rajamouli

பாகுபலி படத்தில் தமிழ் நடிகர்கள் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்னன் என மூன்று பேருக்கும் நல்ல கதாபாத்திரை கொடுத்திருந்தார் ராஜமவுலி. தற்போது உருவாகிவரும் RRR படத்திலும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் சமுத்திரகனி RRR படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே நடிகர் சசிகுமார் இந்த படத்தில் நடிக்கும் நிலையில் தற்போது சமுத்திரக்கனியும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.