BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மீண்டும் தாயாகும் சமீரா ரெட்டி! இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு உறுதி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய சினிமாக்களில் கலக்கிய சமீரா ரெட்டி இரணடாவது முறையாக கர்ப்பமானதை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
முதலில் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர் தமிழில் முதல்முறையாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் சமீரா.

அதனைத் தொடர்ந்து தமிழில் அசல், வெடி, வேட்டை என முன்னனி நடிகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு மகன் பிறந்தார்.
இந்நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் சமீரா ரெட்டி. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ள சமீரா தனது புதிய வரவிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
