வாவ்! சமீரா ரெட்டியின் மகளா இது! என்னவொரு போஸ்! முதன்முதலாக வெளியான செம கியூட் புகைப்படம் இதோ!

வாவ்! சமீரா ரெட்டியின் மகளா இது! என்னவொரு போஸ்! முதன்முதலாக வெளியான செம கியூட் புகைப்படம் இதோ!


sameera-reddy-daughter-photo-viral

கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலமான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.

சமீரா ரெட்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சமீரா 2014ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்குபோட்ட அவர்  குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.

Sameera reddy

இந்நிலையில் சமீரா ரெட்டிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், சமீபத்தில் அழகிய பெண்குழந்தை  பிறந்துள்ளது. இந்நிலையில் சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.