சினிமா வீடியோ

2 மாத கைக்குழந்தையுடன் மூச்சு திணறதிணற சமீராரெட்டி செய்த சாகசம்.! ஷாக் வீடியோ இதோ!!

Summary:

sameera reddy climbing on peek with 2 month baby

கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
மேலும் சமீராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.

sameera reddy க்கான பட முடிவு

இந்நிலையில் அவர் தனது இருமாத குழந்தையுடன் கர்நாடகாவில் உள்ள முல்லயநாகிரி சிகரத்தில் ஏறியுள்ளார். 6300 அடி உயரம் கொண்ட அந்த உயரமான மலையில் தனது கைக்குழந்தையுடன் ஏறியது நிறைய தாய்மார்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் எனது பயணத்திற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும்  எனக்கு மலை ஏறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், மலை ஏறும் போதே குழந்தைக்கு இடையிடையே தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement