இன்னும் 10 தான் பாக்கி.! வியர்க்க விறுவிறுக்க சமந்தா செய்த வேற லெவல் காரியம்! வைரலாகும் புகைப்படம்!!

இன்னும் 10 தான் பாக்கி.! வியர்க்க விறுவிறுக்க சமந்தா செய்த வேற லெவல் காரியம்! வைரலாகும் புகைப்படம்!!


samantha-workout-video-viral-QUD46R

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமந்தா விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் செம்ம ஹிட்டாகி அவர் அனைவரையும் கவர்ந்தார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தாராளமாக கவர்ச்சி காட்டியும் வருகிறார்.

samantha
அதுமட்டுமின்றி அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அதற்காக கடினமான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், வெயிட் தூக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், 90 கிலோவை தூக்கிவிட்டதாகவும், இன்னும் 10 தான் பாக்கி எனவும் கூறியுள்ளார். அது வைரலாகி வருகிறது.