அமெரிக்காவில் ஆண் நண்பருடன் சமந்தா செய்த செயல்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..samantha-workout-photos-viral

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் சிவா நிர்வாணா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

samantha

இதற்காக கடந்த வாரம் ஹைதரபாத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திடீரென மேடையில் ஏறி நடனமாடி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

இந்நிலையில், மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள சமந்தா, அங்குள்ள ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி, வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

samantha

இதேபோல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41வது இந்திய தின அணிவகுப்பில் கலந்துகொண்ட சமந்தாவிற்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.