இப்படியொரு சர்ச்சை காட்சிகள் இருக்குதா?? சமந்தாவின் வெப்தொடரை தடை செய்ய கோரிக்கை!! இயக்குனர்கள் விளக்கம்!!

இப்படியொரு சர்ச்சை காட்சிகள் இருக்குதா?? சமந்தாவின் வெப்தொடரை தடை செய்ய கோரிக்கை!! இயக்குனர்கள் விளக்கம்!!


samantha-webseries-have-controversy-to-release

2019ல் அமேசான் பிரைமில் வெளியாகி செம ஹிட்டடித்த வெப் தொடர் தி பேமிலி மேன். அதன் இரண்டாவது சீசன் தற்போது உருவாகியுள்ளது. அதில் சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தத் தொடரில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் டிரைலர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்  அமேசான் பிரைமில் வெளியாக உள்ள தி பேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

samanthaஇந்நிலையில் இதற்கு விளக்கமளித்து வெப்தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளின் அடிப்படையில் யூகமான சில சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த தொடரின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் ஆகியோர் தமிழர்கள். நாங்கள் தமிழ் கலாசாரத்தை நன்கு அறிவோம். 

இந்த தொடருக்காக நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்துள்ளோம். அனைவரும் பொறுத்திருந்து இந்த தொடரை பாருங்கள். தொடரை பார்த்த பிறகு நீங்கள் எங்களை பாராட்டுவீர்கள் என எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர்.