அவருடன்தான் அந்த விஷயம் ரொம்ப கஷ்டம்.! புலம்பி தள்ளிய நடிகை சமந்தா!!

samantha talk about juniot ntr dance


samantha talk about juniot ntr dance

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

samantha

இவர் நடிப்பது மட்டுமின்றி நடனமாடும் திறமையும் கொண்டவர்.இந்நிலையில், சமந்தா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் உங்களுக்கு யாருடன் நடனமாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு சமந்தா,  ஜூனியர் என்.டி.ஆருடன் நடனமாடுவது தான் ரொம்ப கஷ்டம். கடினமான டான்ஸ் ஸ்டெப்புகளை கூட அவர்  ஈசியாக செய்து விடுவார். ஆனால், நான் ரொம்ப கஷ்டப்பட்டு பலமுறை ரிகர்சல் செய்து விட்டு தான் ஆடுவேன்.அவருடன் டான்ஸ்  ஆட சென்றாலே உடைஎல்லாம் களைந்து, ஹேர் ஸ்டைலே களைந்து வியர்த்து போய்விடும் என்று சமந்தா  கூறியுள்ளார்.