எப்படி இருந்துச்சு தெரியுமா? முதன்முறையாக விவாகரத்து குறித்து ஓப்பனாக போட்டுடைத்த நடிகை சமந்தா!!

எப்படி இருந்துச்சு தெரியுமா? முதன்முறையாக விவாகரத்து குறித்து ஓப்பனாக போட்டுடைத்த நடிகை சமந்தா!!


samantha-talk-about-divorce-with-nagachaitanya

தென்னிந்திய சினிமாவில் பல டாப் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமந்தா தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தனர்.  அதனை தொடர்ந்து சமந்தா பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அண்மையில் காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டார்.

samantha

அப்பொழுது நடிகை சமந்தாவிடம் நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கரண் ஜோகர் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா, நாகசைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தற்போது பரவாயில்லை. முன்பைவிட நான் தைரியமானவளாக உணர்கிறேன்.

எனக்கிருந்த கடினமான உணர்வு, இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது. அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் சில சமயங்களில் மாற்றம் வரலாம்” என கூறியுள்ளார்.