சமந்தாவை வற்புறுத்தி நடிக்க வைத்த சாகுந்தலம் இயக்குநர்.. படப்பிடிப்பின் போது பயந்துகொண்டே நடித்தாரா.?

சமந்தாவை வற்புறுத்தி நடிக்க வைத்த சாகுந்தலம் இயக்குநர்.. படப்பிடிப்பின் போது பயந்துகொண்டே நடித்தாரா.?



samantha-speech-about-her-fear-during-sagunthalam-movie

கோலிவுட் திரையில் முண்ணனி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழில் 'பானா காத்தாடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சமந்தா தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். பானா காத்தாடி படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

சமந்தா

சமீபத்தில் சமந்தா நடித்து வெளிவந்த யசோதா திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழி மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனத்தைப் பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. இதையடுத்து நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இதன்பிறகும் தொடர்ந்து படங்கள் நடித்து கொண்டிருந்தார். சமீபத்தில் தெலுங்கு படமான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தில் 'ஊம் சொல்றியா மாமா ம்கும் சொல்றியா மாமா' பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இப்பாடல் மிகபெரிய ஹிட்டாகியது.

மேலும், சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இதனைபற்றி ட்விட்டரில் அவரே பதிவு செய்தார். மெதுவாக நோய் குணமான நிலையில் சமந்தா மீண்டும் நடிக்க ஆரம்பித்து சாகுந்தலம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சமந்தா

இதே நிலையில், சமந்தா சாகுந்தலையாக நடித்த படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது. தற்போது சமந்தா ஒரு பேட்டியில் "சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்காக மிகவும் பயந்தேன். படத்தின் இயக்குநர் கதையை சொன்னபோது நடிக்க மறுத்துவிட்டேன்..ஆனால் வற்புறுத்தி நடிக்க வைத்தார். தற்போது இந்த படத்தில் சாகுந்தலை கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது என்று பெருமையுடன் கூறினார். சமந்தாவின் இப்பேட்டி வைரலாகி சாகுந்தலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.