ரசிகர்களை சொக்கவைத்த சமந்தா! அவர் கட்டியிருக்கும் அந்த புடவையின் விலை மட்டும் இவ்வளவா???

ரசிகர்களை சொக்கவைத்த சமந்தா! அவர் கட்டியிருக்கும் அந்த புடவையின் விலை மட்டும் இவ்வளவா???


samantha-saree-rate-viral

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார். இதுகுறித்து பல கருத்துக்கள் பரவி வந்தாலும் அதற்கெல்லாம் தைரியமாக சமந்தா பதிலடி கொடுத்து விட்டு தனது பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தாறுமாறாக கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் பேஷன் உடைகள் மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்களுக்கான ட்ரெண்ட் செட்டராகவும் மாறியுள்ளார். அவரது பேஷனை பல பெண்களும் பாலோ செய்கின்றனர். இந்நிலையில் அவர் அண்மையில் மஞ்சள் நிற புடவை அணிந்து வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.

samantha

அதனைத் தொடர்ந்து பலரும் அந்தப் புடவையை குறித்த தகவல்களை இணையத்தில் தேடத் துவங்கினர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த புடவை கையால் நெய்யப்பட்டதாம். மேலும் இதன் விலை 32.800 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.