ஈஷா சிவராத்திரி விழாவில் உற்சாகமாக நடனமாடிய பிரபல முன்னணி நடிகைகள்! தீயாய் பரவும் வீடியோ!!

ஈஷா சிவராத்திரி விழாவில் உற்சாகமாக நடனமாடிய பிரபல முன்னணி நடிகைகள்! தீயாய் பரவும் வீடியோ!!


samantha-ragul-preeth-singh-join-in-eesha-sivrathiri-po

நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மக்கள் பலரும் இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர். இந்த நாளில் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி திருவிழா களைகட்டும்.

இவ்வாறு நேற்றும் கோவை வெள்ளியங்கிரி மலை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி திருவிழா ஆடல், பாடல் என கலைக்கச்சேரிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களும், பல துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அங்கு நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஆதியோகி சிலைக்கு முன்பு அவர்கள் எடுத்துக்கொண்ட  செல்பி புகைப்படத்தை சமந்தா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  மேலும் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங்க் நடனமாடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகிறது.