நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி... வைரலாகும் வீடியோ!!

நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி... வைரலாகும் வீடியோ!!


 Samantha latest video viral

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

நடிகை சமந்தா தற்போது ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா அண்மையில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக் கூறி வந்தனர்.

நடிகை சமந்தா அரிய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையிலும், விடாமுயற்சியுடன் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கும் வகையில் ஹெவி ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.