புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இதெல்லாம் நியாயமே இல்லை.. ஒரு மணி நேரத்திற்கு 30 லட்சம் கேட்ட சமந்தா..
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து, சில வருடங்களிலேயே பரஸ்பர விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கின்றனர்.
விவகாரத்துக்குப் பிறகு, முழுவீச்சில் சினிமாவில் கவனம் செலுத்திய சமந்தா, "ஊ சொல்றியா மாமா " ஐட்டம் பாட்டுக்கு ஆடி ரசிகர்களைக் கவர்ந்தார். இந்நிலையில் தான் அவருக்கு மயோசிட்டிஸ் நோய் வந்து அதற்கு சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்துள்ள "குஷி" திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகிறது. சமந்தா இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சமந்தா, அங்கு குஷி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சில மணிநேரம் மட்டுமே நடக்கும் இந்நிகழ்ச்சிக்காக 30லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.