
Samantha answered movie experience to fan
தமிழ் சினிமாவில்
ஏராளமான திரைப்படங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு மொழியிலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சமந்தா ரொமான்டிக், காமெடி என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் வெப் சீரிஸ் ஒன்றில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார். மேலும் சமீபத்தில் அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்களுக்கு கடினமாக இருந்தது என கேட்டதற்கு சமந்தா, இயக்குனர் கௌதம்மேனனை சந்திக்கும் வரை ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என நினைத்தேன். மேலும் நந்தினி ரெட்டியின் படத்தில் நடிக்கும் வரை காமெடி செய்வது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் தற்போது எதுவும் கடினமில்லை என கூறியுள்ளார்.
நடிகை சமந்தா தெலுங்கில் கௌதம் மேனனின் காதல் படமான ஏ மாய சேசவே மற்றும் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவான ஓ பேபி என்ற படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement