அதெல்லாம் நம்பிக்கை இல்லை.. தூரமா இருங்க! ரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தா நெத்தியடி பதில்!!



samantha-answer-to-love-and-hate

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, பின் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறந்த கியூட் நட்சத்திர ஜோடிகளாக விளங்கி வந்த இருவரும் ஒரு சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சமந்தா தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான வெறுப்பையும், அன்பையும் பெறுவதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நான் அன்பையோ வெறுப்பையோ வாங்காமல் இருக்கவே முயற்சி செய்கிறேன். எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பான தூரத்தில் இருங்கள் என பதிலளித்துள்ளார்.