BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அமெரிக்காவில் சமந்தா, விஜய் தேவரகொண்டா.! நீச்சல் குளத்தில் போஸ்.! வெளியான புகைப்படங்கள்.?
சிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'குஷி' திரைப்படம் சமீபத்தில் உலகெங்கிலும் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம், ஒரு நகைச்சுவை ரொமான்டிக் திரைப்படமாக வந்துள்ளது.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தில், "நா ரோஜா நுவ்வே" பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்தில் ரீல்ஸ் செய்வது போன்ற வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் சமந்தா கலிஃபோர்னியாவில் தனியாக விடுமுறையைக் கழிக்கும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்தில் இருந்தபடியே ரசிகர்களை குஷி திரைப்படத்தை பார்க்க சொல்லி தெலுங்கில் பேசுகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக தான் இருக்கிறார்களோ என்றும், சமந்தா எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.