சினிமா

இணையத்தில் கசிந்த சமந்தாவின் புகைப்படம்.! அசந்துபோன ரசிகர்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Summary:

samantha 96 remake new look picture leak

தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 96. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் திரிஷாவாக சமந்தா ஆகியோர் நடிக்கஉள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்பட ஷூட்டிங்கில் இருந்து சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.  இதிலும் தமிழில் வெளியான 96 படத்தில் த்ரிஷா அணிந்திருந்தது போலவே சமந்தாவும் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து நடித்து வருகிறார்.


 


Advertisement