சினிமா

இந்த செய்தியை கேட்டபோது.. உருக்கமாக மனம் திறந்த நடிகை சமந்தாவின் தந்தை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

இந்த செய்தியை கேட்டபோது.. உருக்கமாக மனம் திறந்த நடிகை சமந்தாவின் தந்தை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைத்தன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் நட்சத்திர ஜோடிகளாக விளங்கி வந்தனர். 

இந்த நிலையில் அண்மைக்காலமாக நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதனைத் தொடர்ந்து சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரியவிருக்கும் தகவலை தனித்தனியாக அறிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மகளது திருமண முறிவு குறித்து சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு கூறுகையில், இது தான் எதிர்பார்க்காத ஒன்று. இது குறித்து கேள்விப்பட்டதும் எனது மனம் செயலற்று போய்விட்டது. எல்லாம் சில நாட்களில் சரியாகி விடும் என முதலில் நினைத்தேன். ஆனால் எனது மகள் அவரது பக்கமுள்ள விளக்கங்களைக் கூறி என்னை சமாதானம் செய்து விட்டார். என் மகள் நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என அவர் கூறியுள்ளார்.


Advertisement