சினிமா

இந்தியன் 2 விபத்தை தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீவிபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

salikiramam shooting spot fire accident

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது, இந்த படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் ராட்சச கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ௧௦க்கும் மேற்பட்டோர் பிகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,

 படப்பிடிப்பில், கமல், இயக்குனர் சங்கர், நடிகை காஜல் அகர்வால் அனைவரும் இருந்துள்ளனர். இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே மாறாத நிலையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைவி திரைப்படத்திற்காக போடப்பட்ட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு படப்பிடிப்பு நடக்காத நிலையில் அங்கு யாரும் இல்லாததால் எந்த படிப்பு ஏற்படவில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்தின் ஒருதளம் முழுவதும் தீயில் கருகியது. படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் ஜெனெரேட்டரிலுள்ள இன்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியதால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement