அந்த மாதிரி வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை தமன்னாவிற்கு சம்பளம் இவ்வளவா! வெளியான ஷாக் தகவல்!

அந்த மாதிரி வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை தமன்னாவிற்கு சம்பளம் இவ்வளவா! வெளியான ஷாக் தகவல்!


Salary for tamanna to act in anthathoon remake

கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகப்பட்ட விமர்சனங்களையும், வரவேற்பும் பெற்ற திரைப்படம் அந்தாதுன். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது  அந்தாதூன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.அதில் ஹீரோவாக நிதினும், தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும்,  ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

tamanna

இப்படத்திற்கு மெர்லபகா காந்தி வசனம் எழுதி இயக்குகிறார். 
அந்தாதுன் திரைப்படத்தில் தபு கணவரை வேறொருவருடன் தகாத உறவு வைத்திருக்கும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கு ரீமேக்கில் அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்  நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். இந்நிலையில் அதில் நடிக்க நடிகை தமன்னா ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனை கொடுக்க படகுழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.