
sakshi post glamour photo
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,51நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் நாமினேட் பட்டநிலையில், குறைவான ஓட்டுக்களை பெற்று சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் அதனுடன் தவறு செய்யுங்கள் ஆனால் அவற்றிலிருந்து அறிவைப் பெற்று வெற்றி பெறுங்கள் என்ற தத்துவதையும் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement