சினிமா பிக்பாஸ்

இப்படி சொல்லிட்டாரே!! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சாக்ஷி முதன்முதலாக செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா.!

Summary:

sakshi post after leaving from bigboss house

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக  பிக்பாசால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில்10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று  லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைவான ஓட்டுக்களை பெற்று சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் வீட்டை விற்று வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அழகான எதிர்மறை எண்ணங்களை விட்டு வெளியேறி, வீடு திரும்பியதில் மகிழ்ச்சி . எல்லா பெண்களும் வலுவாகவும், தைரியமாகவும் இருங்கள், ஒரு ஆனால் நீங்கள் வீழ்ந்துவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.


 


Advertisement