கவினை உருகிஉருகி காதலித்து, நொந்துபோன பிக்பாஸ் சாக்ஷியின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா.! வைரலாகும் ஷாக் வீடியோ!!

கவினை உருகிஉருகி காதலித்து, நொந்துபோன பிக்பாஸ் சாக்ஷியின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா.! வைரலாகும் ஷாக் வீடியோ!!



sakshi enjoyed in newyork viral video

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,மிகவும் விறுவிறுப்பாகவும் , நாளுக்கு நாள் பரபரப்பாகவும்  நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி ஆகிய போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்  பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைதியாக சென்றுகொண்டிருந்த வீடிற்குள் சர்ச்சைகளை கிளப்பும் வகையில் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

Sakshi

இந்நிலையில் தனது முக்கோண கடலால் பல சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியவர் நடிகை சாக்ஷி அகர்வால். சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மாடலாக இருந்து நடிகையாக களமிறங்கிய சாக்‌ஷி ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாக்ஷி தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் மிகவும் மகிழ்ச்சியாக ஊர்சூற்றும் வீடியோவை தனது டுவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.