சினிமா

கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் விளம்பரப் படங்களில் நடிக்காதது ஏன்? அசால்டாக விளக்கமளித்த சாய்பல்லவி!

Summary:

saipallavi explain about reason of not acting in ad

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் பெருமளவில் பிரபலமானவர். ப்ரேமம் படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சாய் பல்லவி. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்ஜிகே போன்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

sai pallaviக்கான பட முடிவுகள்

இந்நிலையில் அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது மேலும் சமீபத்தில் கூட ஒரு கோடி சம்பளத்துடன் ஆடை விளம்பர வாய்ப்பு வந்தது மேலும் 2 கோடி சம்பளத்தில் அழகு க்ரீம் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விளம்பரத்தில் நடித்திருந்தால், எனக்கு பெரியளவில் பணம் கிடைத்திருக்கும். ஆனால் அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். வீட்டிற்கு சென்றால் மூணு சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கில்லை. என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்திற்கு ஏதேனும் உதவ முடியுமா என்று பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். 

 


Advertisement