சாய்பல்லவியின் தங்கையா இது? நடனத்தில் அக்காவையே மிஞ்சிட்டாரே.! வீடியோ பாருங்க..!Sai pallavi sister pooja kannan viral dance video

நடிகை சாய் பல்லவிக்கு இணையாக அவரது சகோதரி மிகவும் அழகாக நடனமாடியுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படம் தமிழ் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பை விட இவரது நடனம் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.

அதிலும் நடிகர் தனுஷுடன் இவர் இணைந்து நடித்த மாறி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் உலகம் முழுவதும் வைரலாகி மாபெரும் வெற்றிபெற்றது. சாய்பல்லவிதன் இப்படி நடனத்தில் அசத்துகிறார் என்றால், அவரது தங்கை அவருக்கு மேல் அற்புதமாக நடனமாடுகிறார்.

Sai pallavi

ஆம், நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உண்டு. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வைரலாகிவருகிறது. தற்போது மிகவும் அழகாக நடனமாடியிருக்கும் வீடியோ ஒன்றை இவர் வெளியிட, அந்த வீடியோ தற்போது செம வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.