சினிமா

மலையாளத்தில் மீண்டும் உருவெடுக்கும் மலர் டீச்சர்! சாய் பல்லவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Summary:

sai pallavi reveals about next malayalam movie

மலர் டீச்சர் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவிற்கு வருவது பிரேமம் படத்தில் ஆசிரியராக தோன்றிய சாய்பல்லவி தான். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் அந்த கதாபாத்திரத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்தவர் சாய்பல்லவி.

சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கஸ்த்தூரி மான், தாம் தூம் போன்ற சில தமிழ் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தோன்றினார் சாய் பல்லவி.

2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.

தொடர்புடைய படம்

சமீபத்தில் தமிழில் வெளியான மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி கதாபாத்திரத்தில் மீண்டும் கலக்கினார் சாய் பல்லவி. படம் அந்த அளவிற்கு வெற்றி வெற்றி பெறாவிட்டாலும் சாய் பல்லவி நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. இந்த படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடிக்கிறார். விவேக் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. இது ஒரு காதல் திரில்லர் படமாக இருக்கும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகி உள்ளது. 


Advertisement