பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி! காரணம் என்ன தெரியுமா?

பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி! காரணம் என்ன தெரியுமா?


Sai pallavi rejects magesh babu film

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் ப்ரேமம் படம் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாகிவிட்டார்.

2015ல் வெளியான பிரேமம், 2017ல் வெளியான தெலுங்கு படமான ஃபிடா ஆகியவற்றை தவிர சாய் பல்லவிக்கு மற்ற படங்கள் எதுவும் பெரிதாக சொல்லும்படி இல்லை. குறிப்பாக 2018 ஆம் அவருக்கு பெரும் சோகத்தையே கொடுத்தது. அந்த ஆண்டில் வெளியான மாரி2 படமும் வசூலில் ஒன்றும் சாதிக்கவில்லை. ஓரே ஆறுதல், அவரது நடனத்தால் பிரபலமான ரௌடி பேபி பாடல் தான். 

Sai pallavi

இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் நடிக்க இயக்குநர் அனில் ரவிபுதி, சாய் பல்லவியிடம் அணுகியுள்ளார். ஆனால் அவரோ கதையை கூட கேட்காமல் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். காரணம், அடுத்த ஆகஸ்ட் வரை பிஸியாக இருப்பதாகவும் புதிய படங்களில் இப்போது நடிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். 

ஆனால் உண்மையில், சாய் பல்லவியின் ரசிகர்களில் சிலருக்கு அவர் மகேஷ் பாபுவுடன் நடிப்பது பிடிக்கவில்லையாம். மேலும் மகேஷ் பாபுவின் ரசிகர்களும், அவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தான் சரியாக இருப்பார்; சாய் பல்லவி ஒத்துவர மாட்டார் என கமெண்ட் செய்துள்ளனராம். இதைக் கேட்டு அப்செட்டானதால் தான் சாய் பல்லவி கதையை கூட கேட்காமல் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளாராம்.