தமிழகம் சினிமா

இயக்குனர் பாரதிராஜாவை மிஞ்சும் ஒரே இளம் இயக்குனர் இவர்தான்! பாரதிராஜா முன்பே போட்டுடைத்த தயாரிப்பாளர்!

Summary:

s Dhanu talk about vetrimaran and barathiraja


ஆனந்த விகடன் சினிமா விருதுகள் என்பது ஆனந்த் விகடன் இதழ் சார்பாக தமிழக திரைத்துறையினருக்கு வருடாந்திர விருது வழங்கும் விழாவாகும். 2008 இல் இந்த விருது முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அதேபோல் இந்த வருடமும் திரைத்துறையினருக்கு வருடாந்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த விருதுவழங்கும் விழா பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விழாவாகும். உண்மையான கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு விருதுவழங்குவது தான் இந்த விருதுவழங்கும் விழா.

இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விருதுகளையும் வழங்கினர்,. விருதுகளையும் வாங்கினர். அப்போது அசுரன் படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு கொடுக்கப்பட்டது. அந்த விருதினை இயக்குனர் சிகரம் பாரதிராஜா வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் இயக்குனர் வெற்றிமாறனையும், நடிகர் தனுஷையும் புகழ்ந்து பேசினார். அசுரன் படத்தை பார்த்த பிறகு அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் போல் இருந்தது என தெரிவித்தார். 

அப்போது மேடையில் இருந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு வெற்றிமாறனையும், நடிகர் தனுஷையும் புகழ்ந்து பேசினார். அப்போது பாரதிராஜா அவர்களை பார்த்து உங்களை விரைவில் மிஞ்சும் இயக்குனர் வெற்றிமாறன் தான் என தெரிவித்தார்.


Advertisement