காதல் ஜோடியாக காரில் சுற்றும் பிரபல நடிகர் - நடிகை?..! லீக்கான போட்டோவால், பற்றி எரியும் இணையம்..!!

காதல் ஜோடியாக காரில் சுற்றும் பிரபல நடிகர் - நடிகை?..! லீக்கான போட்டோவால், பற்றி எரியும் இணையம்..!!


Rumored Couple Rashmika Mandanna Vijay Deverakonda Pictures

தெலுங்கு மொழியில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்தவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவருக்கும் அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அப்படத்தில் உள்ள இங்கெம் பாடலை இன்றளவும் காலர் டியூனாக வைத்துக்கொண்டு பலரும் சுற்றி வருகிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து, இருவரும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர். 

rashmika mandanna

ஆனால், பலரும் இவர்களின் காதல் காட்சிகளில் மயங்கி இருப்பதால், திரைத்துறை ஜோடியை நிஜத்திலும் ஜோடியாக்கலாம் என்று முடிவெடுத்து, இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் புரளியை கிளப்பி வருகின்றனர். அதற்கு அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. 

rashmika mandanna

அவ்வப்போது இருவரும் சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது இருவரும் காரில் பயணித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இருவரும் காதலர்கள் என்று கூறி வந்த பலரும், இந்த புகைப்படத்தை பார்த்து பெட்ரோல் ஊற்றி கருத்துக்களை தீயாய் எரியவிட்டு வருகின்றனர்.