சினிமா

முதல் முறையாக வெளியான ரவுடி பேபி பாடலை பாடிய பெண்ணின் புகைப்படம்! இதோ!

Summary:

Rowdy baby singer thee photo

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாக மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மாரி. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவானது. முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றிபெறவில்லை.

மாரி 2 படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்று உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இதுவரை 400 மில்லியனுக்கு மேல் இந்த வீடியோ YouTube இல் பார்க்கப்பட்டுள்ளது. யுவன்சங்கர் ராஜா இந்த பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

இசை, நடனம், குரல் என அனைத்தும் இந்த பாடல் மாபெரும் வெற்றிபெற உதவியது. நடிகை சாய் பல்லவியின் நடனம் இந்த பாடலுக்கு பெரிய ப்ளஸாக அமைந்திருந்தாலும் இந்த பாடலை பாடிய பெண்ணின் குரலும் பாடலின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.

இந்த பாடலை பாடிய பெண்ணின் பெயர் தீ. இதுவரை இவரது புகைப்படம் எதுவம் வெளியாகாத நிலையில் ரவுடி பேபி பாடலின் வெற்றிக்கு காரணமான பாடகி இவர்தான் என பிரபல இசை அமைப்பாளரும், நடிகருமனா GV பிரகாஷ் பாடகி தீயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவரது புகைப்படம். 


Advertisement