"பிரபல நடிகருடன் அந்த மாதிரி நடிக்க வேண்டுமென்று ஆசை" நடிகை ரோஜா ஓபன்..

"பிரபல நடிகருடன் அந்த மாதிரி நடிக்க வேண்டுமென்று ஆசை" நடிகை ரோஜா ஓபன்..


roja-want-to-act-with-magesh-babu

தற்போது ஆந்திர அமைச்சரை சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா. இவர் 1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். 1992ஆம் ஆண்டு பிரஷாந்துடன் "செம்பருத்தி" திரைப்படத்தில் தான் தமிழில் அறிமுகமானார்.

tollywood

தொடர்ந்து சரத்குமார், ரஜினிகாந்த், கார்த்திக், பார்த்திபன் என அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார் ரோஜா. 2015ம் ஆண்டு "என் வழி தனி வழி" என்ற படத்தில் தான் ஒரு கேரக்டர் ரோலில் கடைசியாக ரோஜா நடித்திருந்தார். தெலுங்கில் 2013ம் ஆண்டு "டாட்டர் ஆப் வர்மா" படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

அந்த எந்தப் படங்களிலும் நடிக்காமல், முழு நேர அரசியல்வாதியாக மாறிய ரோஜா, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது ரோஜா, "எனக்கு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.

tollywoodtollywood

அதுவும் மகேஷ் பாபுவுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால், மகேஷ் பாபுவுக்கு அக்கா அல்லது அண்ணி போன்ற ஏதோ ஒரு கேரக்டரில் நடிப்பேன். ஆனால் அவருக்கு அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன்" என்று ரோஜா கூறியுள்ளார்.