வாவ்.. ரோஜா சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு விழா.! கணவருடன் எவ்ளோ கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!

வாவ்.. ரோஜா சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு விழா.! கணவருடன் எவ்ளோ கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!


roja-serial-actress-vj-akshaya-baby-shower-photos-viral

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று 'ரோஜா'. இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் ஹீரோவாக அர்ஜுன் ரோலில் நடிகர் சிபு சூரியன், ஹீரோயினாக ரோஜா கேரக்டரில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகின்றனர். 

இந்த சீரியலில் ஆரம்பத்தில் அனு என்ற வில்லி கதாபாத்திரத்தில்  நடித்து வந்தவர், ஷாமிலி. திருமணமான நிலையிலும் சீரியலில் நடித்து வந்த அவர் கர்ப்பமாக இருந்ததால் திடீரென சீரியலை விட்டு விலகினார். அதனை தொடர்ந்து விஜே அக்ஷயா இந்த தொடரில் செம மிரட்டலாக வில்லியாக நடித்து வந்தார். திருமணமாகி நடித்து வந்த அவர் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் காட்டப்படாமல், ரோஜா சீரியல் புதிய கோணத்தில் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் அக்ஷயாவுக்கு அண்மையில் மிகவும் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது கணவருடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை அக்ஷயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.