BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.! வெளியிட்ட கியூட் புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந்தத் தொடர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. மேலும் அந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் மற்றும் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்தத் தொடரில் முதலில் அனு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி சுகுமார். அவர் தனக்கு கொடுத்த நெகடிவ் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் ஷாமிலி சில மாதங்களுக்கு முன்பு தொடரை விட்டு பாதியிலேயே விலகினார்.
பின்னர் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்த அவர் தனது கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் கைவிரல்களை புகைப்படமாக வெளியிட்ட ஷாமிலி, காத்திருப்பு முடிவடைந்தது... எங்களது இளவரசியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்