வாவ்.. ரோஜா சீரியல் நடிகையோட இரு தங்கச்சிகளையும் பார்த்துருக்கீங்களா! அக்கா மாதிரியே செம கியூட்ல..

வாவ்.. ரோஜா சீரியல் நடிகையோட இரு தங்கச்சிகளையும் பார்த்துருக்கீங்களா! அக்கா மாதிரியே செம கியூட்ல..



roja-serial-actress-priyanga-sisters-photo-viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியிலும் முன்னணி வந்து செம ஹிட்டான தொடர் ரோஜா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்புசூர்யன், ஹீரோயினாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பிரியங்கா நல்காரி கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நா சாமி ரங்கா, ஹைபர், நேனே ராஜு நேனே மந்திரி என தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Roja

இந்த நிலையில் தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ப்ரியங்காவிற்கு இரு தங்கைகள் உள்ளனர். அவர் தனது தங்கைகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் ரோஜாவிற்கு இவ்வளவு அழகிய தங்கைகளா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.