"யூடியூப் சேனல்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" ரோபோ சங்கரின் அதிரடி பேச்சு..Robo sanker openup in promotion function

விஜய் டிவியின் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

robo

இதன்பிறகு இவருக்கு தனுஷ், சிவ கார்த்திகேயன் ஆகியோர் படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சில முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்தார்.

இந்நிலையில், திடீரென அவர் உடல் எடை குறைந்த நிலையில் ஒரு புகைப்படம் வெளியானது. அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகினர். அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டது தெரிய வந்தது. ஆனால் பலரும் அவரைப் பற்றி பல்வேறு விதமாக பேசி வந்தனர்.

robo

இதுகுறித்து கூறிய அவர், " கடந்த சில மாதங்களாக நான் உடல்நிலை சாரியில்லாமல் இருந்தேன். ஆனால் சிலர் நான் இறந்துவிட்டேன் என்ற தகவலைப் பரப்பினர். இதனால் என் குடும்பத்தினர் மிகுந்த வேதனையடைந்தனர். நான் இப்போது உங்கள் முன் இருக்கிறேன். ஆனால் அந்த மாதிரி பேசிய யூ டியூப் சேனல்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.