என்னது ரோபோ ஷங்கருக்கு இரண்டாவது குழந்தையா.. பேட்டியில் உண்மையை போட்டு உடைத்த ரோபோ சங்கர்.?



Robo sanker openup about he wanted second child

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென இடத்தை நிலைநாட்டியுள்ளார்.

robo

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படிப்படியாக முன்னேறி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். முதன்முதலில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் படத்திற்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்த ரோபோ சங்கர் மிகவும் மெலிந்து விட்டதாக செய்தி வைரலானது. இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு உடல்நிலை மாறிவிட்டது என்று சமீபத்தில் செய்தி வெளியானது.

robo

இதனையடுத்து தற்போது வனிதா விஜயகுமார், ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவியை பேட்டி எடுத்தார். ரோபோ சங்கர் அவரின் உடல்நிலை குறித்தும், அவர் உடல் மெலிந்த காரணத்தை குறித்தும் பேசியிருந்தார். மேலும் அவரது மகள் இந்திரஜாவிற்கு திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், இரண்டாவது குழந்தைக்கு ரெடியாக போகிறேன். அதற்கு தான் ரெடி பண்ணிட்டு இருக்கிறேன் நேரம் கிடைக்க மாட்டேங்குது என்று காமெடியாக வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.