பல ஆண்டு ரகசியத்தை மேடையில் உடைத்த ஆர்.கே. சுரேஷ்.. வியந்துபோன அதர்வா..! என்ன சொன்னார் தெரியுமா?.!!

பல ஆண்டு ரகசியத்தை மேடையில் உடைத்த ஆர்.கே. சுரேஷ்.. வியந்துபோன அதர்வா..! என்ன சொன்னார் தெரியுமா?.!!


rk-suresh-about-actor-adharva-father-legend-murali

 

லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில், அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள பட்டத்து அரசன் திரைப்படம் நவ. 25ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் பேசினார். 

rk suresh

அவர் பேசுகையில், "இந்த படத்தின் தலைப்பு தம்பி அதர்வாவுக்கு பொருத்தமாக இருக்கும். அதர்வாவின் தந்தை முரளி நடித்த முதல் படத்தை தயாரித்தவர் எனது அப்பா. இது 1986ல் நடந்தது. இந்த விஷயம் அதர்வாவுக்கு தெரியுமா? என்று தெரியவில்லை. நான் முதலில் உங்களிடம் சொல்கிறேன். அன்று அதர்வா குட்டி பையனாக இருப்பார். 

rk suresh

அன்று நானும் திரைத்துறையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். இன்று நடிப்பு, தயாரிப்பு பணிகள் என இருக்கிறேன். அதர்வா எனக்கு சொந்த தம்பி போல. அவருக்கு அவ்வப்போது சில ஆலோசனைகளையும் வழங்குவேன். அவர் இதயம் 2 படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்.