விரைவில் எல்.கே.ஜி 2 & மூக்குத்தி அம்மன் 2: அசத்தல் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.!

விரைவில் எல்.கே.ஜி 2 & மூக்குத்தி அம்மன் 2: அசத்தல் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.!



RJ Balaji Think about LKG 2 and Mookuthi Amman 2 

 

கோகுல் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்.ஜே பாலாஜி, மீனாக்ஷி சௌதாரி, கிஷன் தாஸ், சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் நடித்து 25 ஜனவரி 2024 அன்று வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.

மாறுபட்ட கதைக்களம் கொண்ட சிங்கப்பூர் சலூன், கருத்து மற்றும் காமெடி காட்சிகள் வரவேற்பை பெற்றன. இன்று படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனருக்கு செயின் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தின் வெற்றிவிழாவில் பேசுகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேசனுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம், எல்கேஜி இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வழங்க நினைக்கிறன் என்று குறிப்பிட்டார். 

tamil cinema

இதன் வாயிலாக ஆர்.ஜே பாலாஜி எல்.கே.ஜி 2 மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படப்பணிகளை விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் வரவேற்பு மற்றும் வசூல் ரீதியாக ஏகபோக வெற்றியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

19 பிப்ரவரி 2019 அன்று, சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பில், பிரபு இயக்கத்தில், நடிகர்கள் ஆர்.ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ராம்குமார் கணேசன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து எல்.கே.ஜி படம் வெளியானது. 

அதேபோல, ஆர்.ஜே பாலாஜி, நாராயணன் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்.ஜே பாலாஜி, நயன்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்ஸத்ரா, அஜய் கோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து மூக்குத்தி அம்மன் படம் வெளியானது.